இந்து நடுநிலைப்பள்ளி

SMART SCHOOL


இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி மாவட்டம்       

9487387200 / 9750259000


YouTubeFacebookLink

HINDU MIDDLE SCHOOL NEWS

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியின் 101 வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு அம்பாசமுத்திரம் வனச்சரகர் திரு குணசீலன் அவர்கள் தலைமை வைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். 

ஆசிரியை திருமதி ஜேஸ் மாலாஅவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். தலைமை ஆசிரியர்  திரு . ராம்சந்தர் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்கள். பள்ளி செயலர் திரு டி வி சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்கள். 

 மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ மாணவிகள் டேக்வாண்டோ பயிற்சியாளர் திரு பாரதிராஜா அவர்களின் பயிற்சியில் டேக்வாண்டோ மற்றும் சிலம்பம் ஆகியவற்றை பயிற்சி செய்து காண்பித்தார்கள். ஆசிரியை திருமதி. முருகத்தாய் அவர்கள் நன்றியை கூறினார்.

ஆசிரியை திருமதி முத்துச்செல்வி அவர்கள் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி அமுதவல்லி திருமதி கோமதி திருமதி அன்னலட்சுமி ஆகியோர் செய்திருந்தார்கள். விழாவில் வனவர் திரு கண்ணன், திரு அய்யப்பன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சேமிப்புக்கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் திரு. ஆபிரகாம் அவர்கள் தலைமை வகித்தார்கள். முதல் கட்டமாக 17 மாணவர்களுக்கு இன்று சேமிப்பு கணக்கு துவங்கி சேமிப்புக்கணக்குப் புத்தகத்தினை பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் திரு. ஆபிரகாம் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லிடைக்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தினைச் சேர்ந்த திரு. அய்யப்பன்(9994760712) அவர்கள் செய்திருந்தார்கள். 

லைக் &ஷேர்  இன்றைய சூழலில் நம்மில் பெரும்பாலோர் இதில் கட்டுண்டு இருக்கிறோம். இதன் இருண்ட  பக்கத்தின் அபாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  04.08.2023 அன்று நம் அரிகேசவநல்லூர் இந்துநடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு .... 

"வாழ்க்கையில்  நாம் தடுமாறும்போதெல்லாம் நம்மை தூக்கிநிறுத்துவது தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்."

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதையினை விதைத்து வரும்  சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர்  மதிப்பிற்குரிய ரவிசொக்கலிங்கம் அவர்கள் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களிடம்  வரும் புதன் கிழமை(02.08.2023) அன்று "என்னால் முடியும்.." என்னும் தலைப்பில் உரையாடவிருக்கிறார்.சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர்  மதிப்பிற்குரிய ரவிசொக்கலிங்கம்அவர்களை நம் பள்ளிக்கு வருக வருக என்று வரவேற்கிறோம் .

www.hindumiddleschool.me 




சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர்  மதிப்பிற்குரிய ரவிசொக்கலிங்கம் அவர்கள் 

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கு(Zero balance) துவங்கும் முகாம் இன்று அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தினை இளம் வயதிலேயே ஊக்குவிக்கும்  நோக்கத்துடன் இந்த முகாம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.  இதற்கு  உதவி செய்த கல்லிடைக்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் சேவை மையம்  நடத்திவரும் நண்பர் 



 திரு.அய்யப்பன் அவர்களுக்கும்,SBI Financial Inclusion Manager  திரு. ஆப்ரகாம் தாமஸ்  அவர்களுக்கும் வங்கி மேலாளர் திரு. கார்த்திக் இசக்கி அவர்களுக்கும்  மனமார்ந்த நன்றிகள் .

பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான உதவிகளுக்கு தொடர்புகொள்ள  9994760712 அழைக்கலாம் 

முதல் முயற்சியிலேயே 3 வெண்கலப்பதக்கங்கள்  திருநெல்வேலி தருவை  எப் எக்ஸ் பாலிடெக்னிக்  கல்லூரியில் வைத்து நடைபெற்ற மாவட்ட அளவிலான ATYA BATYA  போட்டியில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியிலிருந்து  4 அணிகள் (48 மாணவமாணவிகள் ) கலந்து கொண்டனர் . அதில் 3 அணிகள் வெண்கலப்பதக்கங்கள் பெற்றுள்ளனர். 

ATYA BATYA  போட்டியில் நம் அரிகேசவசநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை ... பயிற்சியளித்த 



 உடற்கல்வி ஆசிரியர் திரு.சுடலைமணி  மற்றும் அவர்களது குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம்.வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு   

எப் எக்ஸ் பாலிடெக்னிக்  கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ATYA BATYA அசோசியேஷன் செயலாளர்  திரு .இசக்கி  அவர்களும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார்கள்  

Questions?

Contact [hindumiddleschool@gmail.com] to get more information on HINDU MIDDLE SCHOOL

Mobile 9750259000/9487387200